» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்​தி​யஸ்​தம்? பிரதமருக்கு காங்​கிரஸ் கேள்வி

வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா  மத்​தி​யஸ்​தம் செய்ததா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்​கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை நிறுத்த, இந்​தியா - பாகிஸ்​தான் இடையே மத்​தி​யஸ்​தம் செய்​த​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரு​கிறார். இந்​நிலை​யில், சீன வெளி​யுறவுத்​ துறை அமைச்சர் வாங் யீ நேற்று அளித்த பேட்​டி​யில், "இந்​தாண்​டில் சீனா தலை​யிட்ட முக்​கிய விஷ​யங்​களின் பட்​டியலில் இந்​தியா - பாகிஸ்​தான் இடையே ஏற்​பட்ட பதற்​ற​மும் ஒன்​று” என குறிப்​பிட்​டார். 

இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை மத்​தி​யஸ்​தம் செய்து நிறுத்​தி​ய​தாக அதிபர் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அதே​போன்ற கருத்தை சீன வெளி​யுறவுத் ​துறை அமைச்​சர் கூறி​யுள்​ளார். இது நாட்​டின் பாது​காப்பை கேலிக்​கூத்​தாக்​கு​வது போல் உள்​ளது.

அருணாச்​சலப் பிரதேச விஷ​யத்​தில் சீனா தொடர்ந்து எதி​ராக செயல்​படு​கிறது. இது போன்ற சூழலில் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் சீனா ஆற்​றிய பங்கு என்ன என்​பது குறித்து நாட்டு மக்​களுக்​கு தெளிவுபடுத்​த வேண்​டும். இவ்​​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory