» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்பும் பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

திங்கள் 22, ஏப்ரல் 2024 11:47:16 AM (IST)

நாட்டில் நிலவும் பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் நரேந்திர மோடி புதிய உக்திகளைக் கையாள்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

செல்வங்களை மறுபகிர்வு செய்துகொள்வதா பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டியிருந்த நிலையில்,முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து மனம் உடைந்து போயிருக்கும் மோடி, பொய்களையும், மோசமான பேச்சுகளையும் பேசி, மக்களை உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார் ராகுல் காந்தி.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரகாரங்கள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் கடுமையாக இருக்கிறது. ஆனால் அனைத்தும் நன்றாக இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். அவர், பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப பல்வேறு உக்திகளைத் தெரிந்துவைத்திருக்கிறார். ஆனால், அவரது பொய்சொல்லும் வேலை முடிவுக்கு வரவிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தோ்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய ‘கறையான்களை’ பரப்பி, நாட்டை வெறுமையாக்கியது காங்கிரஸ். இன்று ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் மீது கடுங்கோபத்தில் உள்ளது. அக்கட்சி தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸின் மிக மோசமான நிலைமைக்கு அக்கட்சியே பொறுப்பு. 

ஒரு காலத்தில் 400 தொகுதிகளில் வென்ற அக்கட்சியால், இப்போது 300 தொகுதிகளில்கூட சுயமாகப் போட்டியிட முடியவில்லை. வேட்பாளா்களே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கடுமையான விமரிசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory