» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி கும்பாபிஷேக நேரலைக்கு தடை: தமிழக அரசு 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு!

செவ்வாய் 23, ஜனவரி 2024 8:17:53 AM (IST)

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரலைக்கு தடை விதித்த விவகாரத்தில் 29-ந்தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவை கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் பொது இடங்களில் ஒளிபரப்பு செய்ய போலீசார் தடை விதித்ததாக புகார் எழுந்தது. இதனை எதிர்த்து பா.ஜனதா பிரமுகர் வினோஜ் பி.செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது வினோஜ் பி.செல்வம் சார்பில் மூத்த வக்கீல்கள் தம்ம சேஷாத்ரி நாயுடு, பி.வள்ளியப்பன் ஆகியோர் ஆஜராகி, மதத்தை வெறுக்கும் அரசியல் கட்சி அதை ஆட்சியிலும் செயல்படுத்துகிறது என வாதிட்டனர்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை செய்ய தனியார் கோவில்களிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். நேரலைக்கு எவ்வித தடையும் இல்லை. இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான அடிஷனல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சட்டப்படி நடந்துகொள்ளவேண்டும். இதுதொடர்பாக வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory