» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புயல் வெள்ள நிவாரண பாதிப்பு : அமித்ஷாவுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு சந்திப்பு

சனி 13, ஜனவரி 2024 4:50:02 PM (IST)

தமிழகத்தில் புயல் வெள்ள நிவாரண பாதிப்புகள் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தனர். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு டெல்லியில் இன்று சந்தித்தனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் எம்.பி. கே.ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அப்போது சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனே வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி.ஆர்.பாலு கூறியதாவது, மிக்ஜம் புயல், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37,907 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரினோம். 

மேலும் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தோம். ஜன.15ஆம் தில்லி திரும்பும் மத்திய அரசின் குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமித்ஷா கூறினார். நிதி வழங்குவது குறித்து வரும் 27ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் அமித்ஷா உறுதி அளித்துள்ளார் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory