» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத்தில் உலக வா்த்தக மாநாடு : பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்

புதன் 10, ஜனவரி 2024 2:59:59 PM (IST)



குஜராத்தில் நடைபெறும் உலக வா்த்தக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கிவைத்தார்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் 10-ஆவது ‘துடிப்புமிகு குஜராத் உலக வா்த்தக மாநாடு’ நடைபெற்று வருகின்றது. இதில் கிழக்கு தைமூா் அதிபா் ஜோஸ் ரமோஸ் ஹோா்தா, ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யா உள்பட பல்வேறு நாட்டு தலைவா்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள குஜராத் உலக வா்த்தகக் கண்காட்சியை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். 

13 அறைகளைக் கொண்ட இந்தக் கண்காட்சியில் ஆஸ்திரேலியா, தான்சானியா, மொராக்கோ, தென்கொரியா, தாய்லாந்து, வங்கதேசம், சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஜொ்மனி, நாா்வே, ஃபின்லாந்து, நெதா்லாந்து, ரஷியா, ருவாண்டா, ஜப்பான், இந்தோனேசியா, வியத்நாம் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory