» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

திங்கள் 2, மார்ச் 2020 4:19:20 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் விரிவுபடுத்தப்பட உள்ளதால் 1வது ரயில்வே கேட் விரையில் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 46 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது. 42 குடிநீர் நிறுவனங்கள் முறையாக உரிமம் பெற்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். 

அவர்கள் பொதுப்பணித் துறையில் தடையில்லா சான்று பெற வேண்டும். இதற்காக அனைத்து குடிநீர் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எத்தனை யூனிட் தண்ணீர் எடுக்கிறார்கள் என்ற முழு விபரத்தை தெரிவிக்க வேண்டும். தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டது. குடிநீர் பிரச்சனையை சமாளிப்பதற்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது. மாவட்டம் முழுவதும் 75 சதவீதம் குளங்களில் தண்ணீர் உள்ளது. உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் நடப்பாண்டில் அதிகளவு மழை பெய்துள்ளதால் அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. நிலத்தடி நீரும் அதிகளவில் உள்ளது. குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால் டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்.

தூத்துக்குடி ரயில் நிலைய பிளாட்பாரம் விரையில் விரிவுபடுத்தப்பட உள்ளது. ரயிலின் நீளம் 1வது ரயில்வே கேட் வரை நீளமாக இருப்பதால், 1வது ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், 2வது கேட்டில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்கப்படும். இதுகுறித்து  குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலத்தில் ரயில்வே துறையினர் பாலம் கட்டுவதில் சிறு சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. அந்த பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ரயில்வே துறையினர் வல்லுநர்களை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வுப் பணி முடிந்த பின்னர் விரைவில் பாலம் கட்டும் தொடங்கும். அதுவரை அந்த பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்கு சிகப்பு வண்ண விளக்குகள் பொருதப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

தி.ப.பெரியாரடியான்Jul 16, 2020 - 10:50:47 PM | Posted IP 162.1*****

மீளவிட்டானுக்கு ரயில் நிலையத்தை மாற்றுவதே சிறந்த முடிவாக இருக்கும்.தூத்துக்குடி-மீளவிட்டான் ரயில் பாதையை நடுவண அரசிடம் கேட்டுப் பெற்று வளர்ச்சியடைந்து வரும் இந்நகருக்கு மேலும் ஒரு நீண்ட சாலை கிடைக்க வகை செய்யவேண்டும். எதிர்காலத்தில் மணியாச்சிக்குப் பதிலாக மீளவிட்டான் சந்திப்பாக மாறினாலும் ஆச்சரியமில்லை!

தி.ப.பெரியாரடியான்Jul 16, 2020 - 10:31:45 PM | Posted IP 108.1*****

*மீளவிட்டானுக்கு ரயில் நிலையம் மாற்றப்படுவது ஒன்றே சரியான தீர்வாக அமையுமெனக் கருதுகிறேன். **அதே நேரம் மீளவிட்டான்வரை உள்ள ரயில்ப் பாதையை தமிழக அரசு நடுவண அரசிடம் கேட்டுப்பெற்று மிக பெரிய சாலையை அந்த இடத்தில் அமைக்க வேண்டும். மிகவேகமாக வளர்ச்சியடையும் இந்நகருக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது உதவும்! ***ஒரு வேளை இந்தக் கருத்து ஏற்கப்படின், எதிர் காளத்தில் நெல்லையிலிருந்து வரும் அனைத்து ரயில்களும் மணியாச்சிக்குப் பதிலாக மீளவிட்டான் வழியாகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனெனில், இப்போதே மணியாச்சி ரயில் நிலையம் போக்குவரத்து நெருக்கடியில் தவிக்கிறது.

Anantharaj, ThoothukudiJun 29, 2020 - 09:57:36 PM | Posted IP 108.1*****

இரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

குலசை தாஹிர்Jun 24, 2020 - 06:34:35 PM | Posted IP 108.1*****

*தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்* *காவல்துறையின் கொடூர செயலால்* *தந்தையும்,மகனையும் இழந்துவாடும்* *அன்னாரின் குடும்பத்தை நேரில் சென்று* *SDPI கட்சியினர் ஆறுதல் கூறினார்கள்* SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொது செயலாளர் உஸ்மான் அவர்களின் தலமையில் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக சாத்தான் குளத்தில் காவல் துறையின் கொடூர செயலால் தந்தையும்,மகனையும் இழந்துவாடும் குடும்பத்துனரை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி. இதில் ஈடுபட்ட காவலர்களுக்கு சட்டபடி தண்டனை பெற்று கொடுக்கவும், அன்னாரின் குடும்பத்தினரின் கோரிக்கையை அரசு நிறைவேற்றிடவும்,அன்னாரின் குடும்பத்தார் எடுக்கும் சட்ட போராட்டகளுக்கும் SDPI கட்சி எப்போதும் உறுதுனையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொண்டோம். இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் குலசை தாஹிர்,பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தொகுதி செயலாளர் அப்துல் காதர், உடன்குடி நகர செயலாளர் ஹனீபா, பொருளாளர் சதாம் உசேன்,குலசை கிளை இனை செயலாளர் சதாம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். தகவல் சமூக ஊடக அணி SDPI கட்சி,தூத்துக்குடி மாவட்டம்

Muruganமே 2, 2020 - 10:48:45 PM | Posted IP 162.1*****

We want overbridge for first railway gate.We also request to shift Tuty melur RS to nearby new busstand for the benefit of our people

BalaApr 11, 2020 - 11:58:24 AM | Posted IP 162.1*****

please make underground in 1st GATE. Please do not change railway status.

GANESHApr 7, 2020 - 04:31:51 PM | Posted IP 162.1*****

Nalla mudivu udana pannunga..illavital station melavitan kondu poga solluvanga..appuram angum traffic anvudan thattaparai....appuram maniyachi..

TuticorinMar 26, 2020 - 08:01:39 AM | Posted IP 162.1*****

1 ம் கேட் வரை ரயில் வருகிறது என்றால் பிளாட்பாரத்தை பீச் ரோடு வரை நீட்டிக்க இடம் உள்ளது .

ராஜாMar 21, 2020 - 12:56:07 PM | Posted IP 173.2*****

மாற்று வழி என்னவென்றால் ரயில்வே நிலையத்தையும் பழைய பேருந்து நிலையத்தையும் மிளாவிட்டனுக்கு மாற்றினால் மிகவும் சிறந்தது நகரமும் வாகனம் மற்றும் ரயில் கதவு திறப்பின் போது ஏற்படும் தொந்தரவும் இருக்காது பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு சிறந்த பயனாக இருக்கும் . கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் . பழைய பேருந்து நிலையம் கட்டும் இடத்தில் லோக்கல் மற்றும் மினி பேருந்துகள் இயக்குங்கள் , மிளவிட்டான் ரயில்வே நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சென்றால் இன்னும் தூத்துக்குடி பெரும் மாநகரகமாக மாறும் - நமது மாவட்ட ஆட்சியர் மேலும் மற்ற அதிகாரிகள் & பொதுநல விரும்பும் நல்ல உள்ளங்கள் அனைவரும் நல்ல முடிவு எடுங்கள் - உங்களை போல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு என் சின்ன யோசனை நன்றி .

JersvaMar 13, 2020 - 03:00:42 PM | Posted IP 173.2*****

ayya mothalla nadanthu porathukku valiya kaatunga.

KanagarajMar 6, 2020 - 10:26:13 PM | Posted IP 108.1*****

St. பேட்ரிக் சர்ச்சிலிருந்து பிரிட்ஜ் ஆரம்பித்து ரயில்வே quarters மேலாக போய் பழைய முனிசிபல் ஆபீஸ் பின்புறம் palathai இறக்கினால் பாதுகாப்பு nonecessity to கிளோஸ் 1ஸ்டேட்டஸ் gate

KanagarajMar 6, 2020 - 10:21:28 PM | Posted IP 108.1*****

Ifyou r railway ஸ்டேஷன் ஷிபிட்ட் to மிளாவிட்டாந்தே ரயில்வேஸ்டேஷன் சுற்றதுவட்டார இடங்கள் விலை மிகவும் மலிவாகிவிடும். Nolandvaluation. Ii

AshokMar 5, 2020 - 01:31:59 PM | Posted IP 173.2*****

பாண்டியபுரம் சிறப்பு மிக்க இரயில் நிலையம்

அண்டன் ஜாய்Mar 4, 2020 - 12:16:39 PM | Posted IP 108.1*****

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தை மீளவிட்டவனுக்கு மாற்றுவது சிறப்பான முடிவாகும் . தற்போது ரயில்வே நிலையம் உள்ள இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் . அந்த இடத்தில் பிரதான சாலை அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தூத்துக்குடி மாநகர் வளர்ச்சி அடையும் . 1. 1ஆம் கேட் மூடப்பட்டால் மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். 2. இரண்டாம் கேட்டில் பாலம் அமைப்பது சாத்தியமாகாது. போக்குவரத்து நெரிசல் தற்போது மிக அதிகமாக உள்ளது. 3.ஒன்றாம் கேட் மூடப்படுவது மூலம் இரண்டாம் கேட்டிற்கு போக்குவரத்து நெரிசல் இதை விட அதிகமாகும்.

GaneshMar 4, 2020 - 12:06:15 PM | Posted IP 108.1*****

Change the station to meelavittan is a good idea.

புவனேந்திரன்Mar 4, 2020 - 08:50:47 AM | Posted IP 108.1*****

மீளவிட்டானுக்கு மாற்றுவது சிறப்பாகயிருக்கும் இன்னும் அதிகமாக வன்டிகள் இயக்க இது வழி வகை செய்யும் அதனால் மாற்றலாம் இருப்புபாதை இருக்கும் இடத்தில் சாலை அமைத்து பேருந்து வசதி செய்து கொடுத்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் நன்றி

சாம்Mar 4, 2020 - 06:09:52 AM | Posted IP 108.1*****

தற்போது இருக்கும் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்

ப. சுகுமார்Mar 4, 2020 - 12:02:34 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி நகர மக்களின் பல்வேறு ஆசோனைகள் இங்கே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கருத்தும் ஒருவகையில் சிறப்பானதாக இருக்கின்றன. மாவட்ட நிர்வாகம், இதனை நன்கு அலசி ஆராய்ந்து, ஓர் முடிவை எடுக்க வேண்டும். வளர்ந்து வரும் தூத்துக்குடி நகரத்துக்கு போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பது முக்கியமானது.

மு. பிரகாசு தமிழன் கீழவேலாயுதபுரம்Mar 3, 2020 - 11:45:38 PM | Posted IP 162.1*****

தொடர் வண்டி நிலையத்தை மாற்றுவதே சிறந்தது மாவட்ட ஆட்சியர் அவர்களே.நகர போக்குவரத்து குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் நகரம்.மேலும் போக்குவரத்து இடையூரு ஏற்படும் .நன்றி

கோமதி சங்கர்Mar 3, 2020 - 10:00:26 PM | Posted IP 108.1*****

புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கலாம் என்பது கருத்து

K RaveendranMar 3, 2020 - 09:10:40 PM | Posted IP 108.1*****

Shift station to Meelavittan. First good road to Meelavittan to reach station easily.First gate and second fate corporation should make good roads. How many times Steel structure over bridge erected and dismantled, waste all. Speed up the sterlite area over bridge which avoid future fatal. Reasons finding administration will never do things. I have been seeing the growth of for the past 66 years. Thanks

SubramanianMar 3, 2020 - 08:25:12 PM | Posted IP 108.1*****

Shifted to melavittan station that will reduce the traffic in second and first gate

செல்வராஜ்Mar 3, 2020 - 05:03:13 PM | Posted IP 162.1*****

மீளவிட்டான் பகுதியில் நிலங்களை வாங்கி குவித்திருக்கும் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கோடிகளில் பெருகுவதற்காக அங்கே ரயில்நிலையத்தை மாற்ற பலகாலமாக திட்டம் போட்டு சதிவேலைகளில் இறங்குகிறார்கள். இரவு ௬ மணிக்கு மேல் அந்த இடத்தில் வந்து இறங்கும் பயணிகளின் உயிருக்கும் உடமைகளுக்கும் எண்ண உத்திரவாதம்? மேலும் ஒரு பயணி அங்கிருந்து ஊருக்குள் வருவதற்கு பெரும் தொகையை ஆட்டோ கட்டணமாக செலவு பண்ண வேண்டிஇருக்கும்

Prasana subramanianMar 3, 2020 - 04:01:34 PM | Posted IP 108.1*****

doing something and do it fast ya

Prasana subramanianMar 3, 2020 - 03:58:44 PM | Posted IP 108.1*****

Doing well Andrew fast

J. SelvakumarMar 3, 2020 - 02:49:52 PM | Posted IP 108.1*****

Build a bridge in cross from water tank to near mangay super market. Students and people can cross it .dont build anything in congested 2nd gate

VasanthMar 3, 2020 - 02:36:46 PM | Posted IP 108.1*****

ரயில்வே ஸ்டேஷனை தூத்துக்குடி கோச்சிங் கரோட்டின் முடிவில் நகர் விலக்குக்கும் ராஜா CFS க்கும் இடையில் உள்ள இடத்தில் அமைந்தால் நன்று ஏற்கனவே அங்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எல்லாம் இணைத்து ஒருங்கிணைந்த இடமாக பெரிய அளவில் சேர்த்து செய்யலாம்

குமார்Mar 3, 2020 - 01:28:39 PM | Posted IP 162.1*****

ரயில் நிலையத்தை மீளவிட்டனுக்கு மாற்றுவதே சரியான தீர்வு...நகரும் வளர்ச்சியடையும்.....ஒன்றாம் கேட்டை மூடினாள் இரண்டாம் கேட்டில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.....இரண்டாம் கேட்டில் பாலம் அமைக்க வாய்ப்பே இல்லை.......ஒரே தீர்வு ரயில் நிலையத்தை மீளவிட்டனுக்கு மாற்றுவதே....

VasanthMar 3, 2020 - 12:43:54 PM | Posted IP 108.1*****

ரயில்வே ஸ்டேஷனை ரோச் பூங்கா ரோட்டில் நகர் விலக்குக்கும் ராஜா CFS க்கும் இடையில் உள்ள இடத்தில் அமைத்தால் நன்றாக அமையும்

R KUMARMar 3, 2020 - 10:53:05 AM | Posted IP 108.1*****

PLS CHANGE RAILWAY STATION TO MEELAVITTAN..

நீதிMar 3, 2020 - 10:18:33 AM | Posted IP 108.1*****

ரயில்வே ஸ்டேஷனை மீளவிட்டனுக்கு கொண்டு செல்ல வேண்டும்

RathanMar 3, 2020 - 08:57:08 AM | Posted IP 108.1*****

We can shift melur ttn station near to new bus stand and construct underground roadway near 2nd gate

Vinoth RathanMar 3, 2020 - 08:53:15 AM | Posted IP 108.1*****

We cant construct overbridge near 2nd gate, we can construct underground terrain

MeiyazhaganMar 3, 2020 - 08:28:19 AM | Posted IP 108.1*****

தூத்துக்குடி நகரம் வளர்ச்சியடைய வேண்டுமானால் இரயில் நிலையம் கண்டிப்பாக மீளாவிட்டானானுக்கு மாற்ற வேண்டும்.

Uppli MSMar 3, 2020 - 07:05:43 AM | Posted IP 162.1*****

இரயில் நிலையத்தை மீளவிட்டான் அல்லது மணியாச்சிக்கு மாற்றினால் மிகவும் முட்டாள்தனமான செயலாகும்.

இன்ஸ்டீன்Mar 3, 2020 - 05:50:09 AM | Posted IP 108.1*****

நகரின் வளர்ச்சியையும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு கீழுர், மேலுர் ரயில் நிலயங்களை மீளவிட்டானுக்கு மாற்றி , தற்பொழுது உள்ள தண்டவாளங்களை அகற்றி விட்டு அந்த ரயில் பாதை முழுவதையும் மாநில அரசு கையகப்படுத்தி சாலையாக மாற்றலாம்

நான் தமிழன்Mar 2, 2020 - 10:56:26 PM | Posted IP 108.1*****

தயவுசெய்து ரயில்வே நிலையம் மீலவிட்டானுக்கு மாற்றப்பட வேண்டும். அதனால் தூத்துக்குடிக்கு இன்னொரு அகலமான சாலையாக ரயில்வே தண்டவாளம் அமையும்..... நெரிசல் குறையும்....

ராஜேஸ்வரன்Mar 2, 2020 - 10:35:22 PM | Posted IP 108.1*****

ரயில்நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றுவது ஒன்றே புத்திசாலித்தனமாகவும் நியாயமானதீர்வாகவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும்.

K.மகேஸ்கிருஷ்ணாMar 2, 2020 - 10:11:09 PM | Posted IP 108.1*****

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் மீளவிட்டானுக்கு மாற்றுவது மிகச் சிறந்தது ,தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் சிதம்பர நகர் மையவாடி உள்ள இடத்தில் மாற்றுவது மிகச்சிறந்தது

Sakthi kumarMar 2, 2020 - 09:50:52 PM | Posted IP 108.1*****

Idhuku munnadi ullavaga idhu elm kandukitala nega elm correct ah panra mathiri iruku vazthukal

Sakthi kumarMar 2, 2020 - 09:50:47 PM | Posted IP 108.1*****

Idhuku munnadi ullavaga idhu elm kandukitala nega elm correct ah panra mathiri iruku vazthukal

Sakthi kumarMar 2, 2020 - 09:50:47 PM | Posted IP 108.1*****

Idhuku munnadi ullavaga idhu elm kandukitala nega elm correct ah panra mathiri iruku vazthukal

WilliamMar 2, 2020 - 09:47:47 PM | Posted IP 162.1*****

Better to Madurai

க.சுதர்ஷன்Mar 2, 2020 - 08:44:10 PM | Posted IP 108.1*****

இரயில் நிலையத்தை இரண்டாம் கேட்டிலிருந்து மூன்றாம் கேட் வரை அமைத்து விடலாம். நிரந்தரமாக முதல் கேட்டை திறந்து விடலாம்

GURUMar 2, 2020 - 08:29:41 PM | Posted IP 162.1*****

Nalla Seithi. Collector Avarkalukku Nantri.

D.Solomon MathanlalMar 2, 2020 - 08:29:27 PM | Posted IP 162.1*****

ஒன்றாவது இரயில்வே கேட் பாதைதான் கொஞ்சம் அகலமான பாதையாகும்.அதை மூடும்போது பிளாட்பாரத்தில் இருந்து பயணிகள் உட்செல்ல வெளியேற தெற்கு வடக்காக இரண்டு பக்கமும் இரயில் மேம்பால நடைபாதை மற்றும எஸ்கலேட்டர் அமைக்கலாம்.இதனால் பீச்ரோடு இரண்டாம் கேட்களில் ஒரே பக்கமாக மக்கள் கூடுவது குறைக்கப்படும்.அடிப்பக்கத்தில் இரண்டு சக்கர வாகனம் ஆட்டோ கார் செல்வதற்கு மட்டும் அண்டர்கிரவுண்டும் அமைத்தால் நன்றாக இருக்கும்.

PSCCMar 2, 2020 - 07:31:49 PM | Posted IP 108.1*****

இரு சக்கர வாகன போக்குவரத்துக்காக S A V பள்ளியின் எதிர் பக்கம் உள்ள பாதையை திறந்துவிடவும் .

MASSMar 2, 2020 - 07:27:25 PM | Posted IP 108.1*****

உடனே செய்யங்கள் , நன்றி

பாபுMar 2, 2020 - 06:30:58 PM | Posted IP 108.1*****

ரயில்நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் மீளவிட்டானுக்கு மாற்றினால் தூத்துக்குடிமாநகரம்மும் வளர்ச்சி அடையும் தொழிலும்பெருகும்

ArunMar 2, 2020 - 06:18:11 PM | Posted IP 162.1*****

Make over bridge in 1 gate

சேகர்Mar 2, 2020 - 05:38:12 PM | Posted IP 162.1*****

மாற்றுவழி எது என்றால் பேசாமல் ரயில்வே நிலையத்தையும் பஸ்ஸ்டாண்டையும் மீளவிட்டானுக்கு மாற்றுவது தான் சிறந்த வழி

சங்கர்Mar 2, 2020 - 05:15:45 PM | Posted IP 162.1*****

Please Migrate the Railway Station to Melavittan Area as Tuticorin is So Congested and will become Soon Polluted City in respect to Increased Traffic. Collector Shouldn't Entertain these People Who Protest against the Expansion of City. Also Find a Way to Swift the Bustand to 3rd Mile and our City Shall be Elaborated.

RAMESHMar 2, 2020 - 05:13:47 PM | Posted IP 162.1*****

1ம் கேட் மூடுவதற்கு முன் 2ம் கேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முயற்சி செய்யவும்

தமிழ்ச்செல்வன்Mar 2, 2020 - 05:12:44 PM | Posted IP 108.1*****

நல்ல முடிவு. உடனே செய்யவும். எதிர்ப்பு செய்கிறவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம். பாராட்டுக்கள்.

ஜெகதீசன்Mar 2, 2020 - 04:50:44 PM | Posted IP 162.1*****

Iம் கேட்டில் மேம்பாலம் கட்டலாமே?

ஜெகதீசன்Mar 2, 2020 - 04:49:02 PM | Posted IP 162.1*****

1ம் கேட்டில் மேம்பாலம் கட்டலாமே.

ராமநாதபூபதிMar 2, 2020 - 04:27:12 PM | Posted IP 108.1*****

மாற்று வலி என்னவென்று யோசிக்காமல் முதலாவது கேட் மூடப்படுவது பெரும் போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தும். ரயிலின் நீளம் 1வது ரயில்வே கேட் வரை நீட்டிப்பதால், 1வது ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக இந்த கருத்தை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி தீர்க்கதரிசனமாக சொன்னபோது அதிமுகவினர் கிண்டல் செய்தனர். இன்று இந்த பேராபத்து அவர்களது ஆட்சியிலேயே மக்களின் தலையில் விடிந்து விட்டது

உண்மைMar 2, 2020 - 04:23:04 PM | Posted IP 162.1*****

ரயில் நிலையத்தை மீளவிட்டான் அல்லது மணியாச்சி கொண்டு செல்வது மிக்க பலன் தரும்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory