» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!

வியாழன் 17, மார்ச் 2022 11:29:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சி மேயர் ஜெகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றதில் இருந்து தனது கவனத்திற்கு வரக்கூடிய பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு கானுதல், மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், குடிநீர் பிரச்சனையை போக்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தூத்துக்குடி மாநகர மக்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறார். 

தற்போது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பெற்றிடும் வகையிலான ஒர் புதிய திட்டத்தை  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் உடனடியாகவும், எளிதாகவும் சான்றிதழ்களை பெற்றிடும் வகையில், தமிழக அரசின்  https://www.crstn.org என்ற இணையதள முகவரியில் மாநகராட்சி நிர்வாகம் மூன்றே நாட்களில் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் மூன்றே நாட்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றதழ்கள் பெற்றிட முடியும். இந்த புதிய திட்ட அறிவிப்பு குறித்த தகவலை  மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பகுதி பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் படியும் மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory