» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
தூத்துக்குடி மேலூரில் முத்துநகர், மைசூர் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ஆன்மிக இயக்கம் கோரிக்கை!
சனி 27, மே 2023 12:32:26 PM (IST)
தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையத்தில் முத்துநகர் விரைவு இரயில் மற்றும் மைசூரு விரைவு இரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் "தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் முத்துநகர் விரைவு ரயில் வண்டி இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் மீளவிட்டானில் நின்று செல்கிறது. தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் 2ம் கேட் அருகே செயல்பாட்டில் இருந்தது.
தற்போது 4ம் ரயில்வே கேட் அருகே புதிய பேருந்து நிலையம் அருகே விரிவாக்கம் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. தற்போது மேலூர் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தற்போதைய பிரதான ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் (எண்:12694) இதுவரை மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் மீளவிட்டான் செல்கிறது.
வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகர மக்களின் ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் விரைவு ரயில் வண்டி (எண்:12694) நின்று செல்ல தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி-மைசூர், மைசூர்-தூத்துக்குடி (16235,16236) ஆகிய இரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதனால் பிரதான ரயில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்கள் முன்பதிவற்ற பெட்டிகளில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
Muruganமே 28, 2023 - 12:30:47 PM | Posted IP 172.7*****
We demand direct SETC bus service to Chennai vThiruvanmiyur via Villupuram Puducherry Kalpakkam and Mahabalipuram for the benefit of public
என்னதுமே 28, 2023 - 09:03:38 AM | Posted IP 162.1*****
மாநகராட்சிக்கு மூளை இருக்காது, mp, பணவெறி பிடித்த அரசியல்வாதிகள் எல்லாம் சும்மா, ஸ்மார்ட் சிட்டி யால் எல்லா மரத்தை பிடுங்கி விட்டார்கள் வெயில் தாங்க முடியவில்லை, சிமெண்ட் சாலையில் செல்லும்போது பொதுமக்களுக்கு அடிக்கடி கண் எரிச்சல், கண் புரை நோய் வர வாய்ப்புள்ளது, சிமெண்ட் சாலையில் தேங்கி இருக்கும் மண் களால் வயதான வாகனஓட்டிகள் வழுக்கி விழா வாய்ப்புள்ளது. என்ன அறிவோ அறிவு. படித்தவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும்.
Balamuruganமே 27, 2023 - 08:19:21 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி MP யும் கோரிக்கை வைக்கவேண்டும்.
KANNANமே 27, 2023 - 03:25:30 PM | Posted IP 172.7*****
VVD SIGNAL MEMBAALAM? MOONAM MILE SALAI VIRIVAAKKAM??
புகழேந்திமே 27, 2023 - 02:47:16 PM | Posted IP 172.7*****
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புதுக்கோட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? சமூக ஆர்வலர்கள் கேள்வி
வியாழன் 8, ஜூன் 2023 12:48:27 PM (IST)

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?
திங்கள் 28, நவம்பர் 2022 10:57:27 AM (IST)

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)

அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி டோல்கேட்: கனிமொழி எம்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
புதன் 6, ஜூலை 2022 10:54:23 AM (IST)

விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வியாழன் 17, மார்ச் 2022 11:29:41 AM (IST)

தமிழகத்தில் மே 15 முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்!
சனி 15, மே 2021 12:04:55 PM (IST)

yes keySep 11, 2023 - 12:48:51 PM | Posted IP 172.7*****