» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)தூத்துக்குடி ராயல் பர்னிச்சர்ஸ் ஷோரூமில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‌ விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தூத்துக்குடி பிரதான சாலையான வி.இ. சாலையில் ராயல் பர்னிச்சர்ஸ் மிகப்பிரமாண்டமான 3 அடுக்கு மாளிகையில் அமைந்துள்ளது. இங்கு உலகப்புகழ்பெற்ற பர்னிச்சர் வகைகளிலிருந்து நம் நாட்டில் பிரபலமாக உள்ள பர்னிச்சர்கள் வரை விற்கப்படுகிறது. புதிய, புதிய ரக பர்னிச்சர்  வகைகளை வரவழைத்து வணிகம் செய்வது ராயல் பர்னிச்சர்ஸின் தனிச்சிறப்பாகும்.  தற்போது விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச், ஈசி சேர், ரிலாக்ஸ் சேர் உள்ளிட்ட மரங்களினால் ஆன பர்னிச்சர்கள் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து ராயல் பர்னிச்சர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜாய் கூறுகையில், தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளாக தரமான பர்னிச்சர்கள் தலைமுறைக்கும் பயனுள்ள‌தாக வழங்கி வருகிறோம். ஷோபா செட்ஸ், டைனிங் டேபிள், கம்ப்யுட்டர் டேபிள், ரோலிங் சேர் உட்பட அனைத்து பர்னிச்சர் வகைகளும் விற்பனை செய்து வருகிறோம். தற்போது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச் ஈசி சேர், ரிலாக்ஸ் சேர் உள்ளிட்ட பல வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பலா மரத்திலான இந்த பர்னிச்சர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர் என்றார். 

வீட்டை அலங்கரிப்பதற்காக பல்வேறு பொருட்களை வாங்கினாலும் பர்னிச்சர்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. குறிப்பாக மர பர்னிச்சர்களையே பலரும் விரும்புகின்றனர். பயன்படுத்துவதற்கு வசதியாக இருப்பது மட்டுமின்றி நாகரிகத் தோற்றத்தையும் பிரமாண்டத்தையும் இவை தருகின்றன. "எங்க தாத்தா காலத்து பீரோ, கட்டில் இது" என பாரம்பரியத்தை விட்டுத்தராமல் பயன்படுத்துவர்களும் உள்ளனர். ராயல் பர்னிச்சர்ஸின் விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச் தூத்துக்குடி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


மக்கள் கருத்து

ராணி மா ( திருவாரூர் மாவட்டம்)Aug 16, 2022 - 09:59:36 PM | Posted IP 162.1*****

மரச்சாமான்கள் விபரத்துடன் விலையைக் குறிப்பிட்டால் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். எங்கள் மாவட்டத்தில் உங்கள் கிளை உள்ளதா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory