» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

சனி 30, மே 2026 11:57:20 AM (IST)

பிரபல முன்னணித் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் திரை உலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

"தனிப்பட்ட குடும்ப நிகழ்வு" - ரசிகர்களுக்கு வேண்டுகோள்:

இதுகுறித்து அஜித் குடும்பத்தினர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவுமாக விளங்கிய அஜித்தின் தாயார் இன்று அதிகாலையில் உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். தாயாரின் இறுதிச்சடங்கு குறித்து அஜித்தின் குடும்பத்தினர் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் அந்த அறிக்கையில் விடுத்துள்ளனர்.

"அவரின் இறுதிச்சடங்கு முற்றிலும் ஒரு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவே நடைபெறும். இந்த இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்." பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவும், குடும்பத்தின் இந்த சோகமான சூழலில் தங்களின் தனியுரிமையை மதிக்கும் பொருட்டும் அஜித் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory