» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீணாகப் பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: தொகுதி மறுவரையறை குறித்து இபிஎஸ் விளக்கம்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 4:01:11 PM (IST)



"தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலை பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி இன்று வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடையே அவர் பேசுகையில்:   "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையிலும், மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலுமே தொகுதி மறுவரையறை அமையும் என உறுதியளித்துள்ளார்.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுக்கவே முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறார். இதன் மூலம் மத்திய அரசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என அவர் அஞ்சுகிறார். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் 'டபுள் கேம்' ஆடுகிறார். பல ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்துள்ளார்? எங்களைப் பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கோவை மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். இங்கு எங்குமே கருப்புக்கொடி போராட்டம் இல்லை. தோல்வி பயம் காரணமாகவே ஸ்டாலின் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்கிறார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory