» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேர் வரும் 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வாகினர்.
இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் வெளியிட்டு இருந்தர். அதாவது, சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், "மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, வரும் 25 ஆம் தேதி நான்கு பேரும் எம்.பியாக பதவியேற்க உள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி கூட உள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)











மக்கள் நீதி மய்யம்Jul 13, 2025 - 01:40:01 PM | Posted IP 172.7*****