» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!

சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, மற்றும் திமுகதான் காரணம் என்று என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சினையாக்க முயற்சிக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினையை இப்போது கையில் எடுப்பது ஏன்? திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம்.

தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இந்த ஆட்சி நிறைவேற்றிய நல்ல திட்டங்களை கூற முடியுமா? தேர்தல் வரும் போதுதான் கட்சிகளுக்கு மக்களின் மீது பாசம் வருகிறது. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை செய்தார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

முருகன், சிவன், மாயவன் ஆகியோர் இந்து கடவுளா? என்னோடு யாராவது தர்க்கம் செய்ய முடியுமா? தேர்தல் சமயத்தில் திடீர் பாசம் காட்டுகிறார்கள். மதம் மனிதனுக்கானதா அல்லது மனிதனுக்காக மதமா?. மதத்தைப் போற்றுகிறீர்கள் ஆனால் இங்கே மனிதனைப் போற்றுகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் வாழுகின்ற நாடாக மாற்றுகிறீர்கள்.

ஆனால் நாங்கள் மனிதர்கள் வாழும் நாடாக உருவாக்க நினைக்கிறோம். திமுக அரசுக்கு எதிராக நாள்தோறும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்காமல், போட்டியிடும் துணிச்சல் திமுக, அதிமுகவுக்கு உள்ளதா?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory