» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு

ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)



தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாய் சரவணன் வழிகாட்டுதலின் பேரில், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான ஏ. பிஸ்மிதா முன்னிலையில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 

இதில் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.முருகவேல், தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நிதிபதி ஜெ. ராஜேஷ்குமார், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எஸ் முத்துலெட்சுமி குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ் முத்துலட்சுமி, தென்காசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே என். குரு, ஓய்வு பெற்றநீதிபதிகள் எஸ் தங்கக்கனி, பி. முருகையா மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 கோடி 45 லட்சத்து 25 ஆயிரத்து 681 ரூபாய் மதிப்புள்ள 241 வழக்குகளும், நீதி மன்றத்திற்கு முன் வரும் வங்கி வழக்கு 53,70,816 ரூபாய் மதிப்புள்ள 114 வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது.  சங்கரன்கோவில் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 37,11,100 ரூபாய் மதிப்புள்ள 681 வழக்குகளும். நீதிமன்றத்திற்கு முன்வரும் வங்கி வழக்கு 24,80,741 மதிப்புள்ள 46 வழக்குகளும் சமரசமாக முடிக்கப்பெற்றது.

ஆலங்குளம் மக்கள் நிதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 48,58,150 ரூபாய் மதிப்புள்ள 27| வழக்குகள் சமரசமாக முடிக்கப்பெற்றது. சிவகிரி மக்கள் நீதிமன்றத்தில் 5,42,700 ரூபாய் மதிப்புள்ள 126 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 6,09 ,700 ரூபாய் மதிப்புள்ள 152 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory