» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)
ஈரோட்டில் பெருந்துறை அருகே தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கிற பிரசார கூட்டம் வருகிற டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவினா் தோ்தல் பிரசார கூட்டம் நடத்த போலீஸாா் 84 கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். இவற்றை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால், 16-ஆம் தேதிக்கு பதிலாக 18-ஆம் தேதி இந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள தவெகவினா் முடிவு செய்துள்ளனா். விஜய் பிரசாரம் செய்யும் இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர், காவல்துறையில் கடிதம் அளித்திருந்தார். இதனால் விஜய் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இடத்தை பயன்படுத்திக்கொள்ள தவெக சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் நிலத்தை பயன்படுத்த டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)










