» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!

செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)



கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கலந்துரையாடினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் - கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. 

மேலும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டு, அதில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்த மாணவ மாணவியர்களிடம் விடுமுறை எடுப்பதை தவிர்த்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படித்து, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. வருங்காலங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திட வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் மாணவ மாணவிகளுக்கு ஆரம்பித்திலேயே பள்ளி படிப்போடு என்.சி.ஹெச்.எம், ஜே.இ.இ, எப்.டி.டி.ஐ, ஐ.எம்.யு உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான நுழைவு தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் 12ம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு உதவித்தொகைகள், வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு உதவித்தொகை, திறன்பயிற்சிகள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் நன்றாக பள்ளிப்படிப்பை முடித்து, தங்களது எதிர்கால கனவுகளை நினைவாக்கும் வகையில் குறிக்கோளுடன் படித்து, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும்.

எனவே நீங்கள் அனைவரும் இப்போது இருந்தே கடினமாக உழைத்து படிக்க வேண்டும் என மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆசிரியர்களிடம் நீங்கள் அனைவரும் பொறுப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் முழு தேர்ச்சி சதவீதத்தை அடைவதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட முழு பங்காற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory