» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.மாநில மருத்துவர் அணி நிர்வாகிகள்: சரவணன் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக விஷ்ணு, ரவி, அருண் பிரசாத், நரேஷ், அரவிந்த், பிரிதீங்கா, கார்த்திக், சித்தர் பாண்டியன், மணிமேகலை, ஹரி, ஜெகதா, சினோரா P.S. மோஹித், தமிழினியன், விவேக் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்பெருமை பேசும் விஜய் ஒரு கிணற்றுத் தவளை; திமுகவின் பி டீம் : பாஜக விமர்சனம்
சனி 14, பிப்ரவரி 2026 4:17:13 PM (IST)

விஜய்- திரிஷா குறித்து அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கண்டனம்!
சனி 14, பிப்ரவரி 2026 12:53:03 PM (IST)

திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் - திமுக கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 12:42:15 PM (IST)

விருப்ப மனு சமர்ப்பிக்க பிப்.20-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு : தவெக அறிவிப்பு
சனி 14, பிப்ரவரி 2026 12:26:53 PM (IST)

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு குளறுபடி: சார்புச் செயலாளர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
சனி 14, பிப்ரவரி 2026 12:08:03 PM (IST)










