» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!

திங்கள் 19, மே 2025 5:11:25 PM (IST)



ஈத்தாமொழி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கஞ்சா, காவல்துறையினர் குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஈத்தாமொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். 

சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் மகன் அபிராம் குமார்(20), மங்காவிளை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கபின்(25), கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்த மணி மகன் சுரேஷ்(29), இடலாக்குடி அச்சன் கிணறு தெருவை சேர்ந்த மாஹின் அபூபக்கர் மகன் முகமது ஷாபி(31), இரணியல் சுயம்பு மகன் அபினேஷ்(29) ஆகிய 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory