» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டையினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (19.05.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டையினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீ து தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டையினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன் அவரகள், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, தனித்துணை ஆட்சியர் (நதிநீர் இணைப்பு) சண்முகசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










