» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசை குறை சொல்லாமல் களத்தில் இறங்கி வேலை செய்வது நம் கடமை : கமல்ஹாசன் கருத்து

வெள்ளி 8, டிசம்பர் 2023 10:17:58 AM (IST)

அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

`மிக்ஜம்' புயல் மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வடசென்னை, பொன்னேரி, திருவெற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். கடந்த காலத்தை விட தற்போது அதிக அளவு பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இப்பொழுது அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை. நாங்கள் எப்போதும் அப்படி தான் செய்து கொண்டு இருக்கிறோம். கொரோனா காலத்தில் கூட இந்த வீட்டை நோயாளிகளின் சிகிச்சைக்கு வழங்க முடிவு செய்தேன். ஆனால் அரசு அதை ஏற்கவில்லை.

இதுபோன்ற இடைஞ்சல்கள் எங்களுக்கு புதிதல்ல 40 வருடங்களாக அனுபவித்து வருகிறோம். அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல, அதை பிறகு செய்யலாம், நாம் இப்போது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். வல்லுனர்களுடன் ஆலோசித்து இதுபோன்ற பேரிடர்களுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும். நாம் மக்களுக்கு உதவி செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எங்களுக்கு மட்டும் அல்ல அந்த பொறுப்பு உங்களுக்கும் தான் உள்ளது.

தற்போது வடசென்னை, பொன்னேரி, திருவெற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம்' என்று கூறினார். மேலும் செய்தியாளர் ஒருவர் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன் தேர்தல் குறித்து பிறகு பேசலாம், முதலில் தண்ணீர் வடியட்டும் என்று பதிலளித்தார்.


மக்கள் கருத்து

ஜெய் ஜெய்Dec 8, 2023 - 03:49:18 PM | Posted IP 172.7*****

முழுவதும் சந்தரமுகியாக 200ரூ உபிஸ் ஆக மாறிவிட்டார். கடந்த ADMK ஆட்சியில் நீங்கள் எவ்வளவு குறை கூறீனீர்கள்....மறந்து வீட் டீர்களா? ஒரு சீட்க்காக இப்படி குட்டிக்கரணம் போடுகிறார். உங்களுக்கு சீட் கொடுத்தாலும் மக்கள் ஓட்டுபோடமாட்டார்கள்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory