» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்: டி.டி.வி.தினகரன்

ஞாயிறு 1, அக்டோபர் 2023 5:05:06 PM (IST)

தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளார்கள். தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி  முடிவுக்கு வந்துவிடும் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் கூட்டணி போன்ற முடிவுக்கு பொதுவாகவே மூன்று வாய்ப்புகள் உள்ளது. எங்களுக்கு ஒன்று பா.ஜ.க. உடன் கூட்டணி, மற்றொன்று காங்கிரசுடன் கூட்டணி அல்லது தனித்து போட்டியிடுவது. 

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க வற்புறுத்தியதால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக வரும் தகவலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல்கள் தவறுகளால்தான், தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள்.

இன்று தி.மு.க.வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் உணர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மாற்று சக்தியாக அ.ம.மு.க. வரும். தமிழக மக்கள் உறுதியாக எங்களை ஆதரிப்பார்கள். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. விலைவாசி ரெக்கை கட்டி பறக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

விவசாயிகள், அரசு ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். மேலும் ஆளுநர் பட்டியலின பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை, இதுதான் சமூக நீதியா என கூறுவது கேலி கூற்றானது. தமிழகத்தில் ஆண், பெண் சமம் என்ற சமூக நீதி பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் செயல்களால் தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக நீதி உள்ள சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

தமிழகத்தில் தீண்டாமை இல்லை. ஜாதி, சமய வேறுபாடு இல்லை. கல்வி, தொழிலில் பிறப்பால் எந்த பிரிவினையும் இல்லை. ஆண்களும், பெண்களும் இரு கண்கள் என்ற அடிப்படையில் சமுதாயம் வளர்ந்துள்ளது. எனவே இங்கொன்றும், அங்கொன்றும் தனி நபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் பேசுவது தவறு.

மேலும் தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்த எந்த பதிலும் தற்போது சொல்ல முடியாது, தேர்தல் நேரத்தில் சொல்வோம். ஓ.பி.எஸ். எனது பழைய நண்பர், அவர் ஏதோ கோபத்தில் செய்தது எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது தமிழ்நாட்டில் நடப்பது தான்.

அவர் தனித்து முடிவெடுப்பார், ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம். அவருடைய செயல்பாடுகள் பற்றி எதுவும் சொல்ல இயலாது. அ.ம.மு.க. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என 90 சதவீதம் அ.ம.மு.க.வினர் விரும்புகிறார்கள். ஓ.பி.எஸ்.சுடன் கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் சேரமாட்டோம். தனியாகவே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

peopleOct 2, 2023 - 06:06:04 PM | Posted IP 172.7*****

marupadiyum DMK thaan varum - OK

MGR ரசிகர்Oct 2, 2023 - 03:30:17 PM | Posted IP 172.7*****

இப்பவே அவங்களையும் காணோம் , உங்களையும் காணோம்....சந்தேகமே இல்லை அவர்களின் ஜெராக்ஸ் COPY தான் நீங்கள்....

20 ரூபாய்Oct 1, 2023 - 06:44:01 PM | Posted IP 172.7*****

டோக்கன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory