» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை : பாதிரியார் மீது பரபரப்பு புகார்!
ஞாயிறு 1, அக்டோபர் 2023 4:53:25 PM (IST)
திருநெல்வேலியில் செல்போனில் ஆபாசமாக பேசி பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்(39). இவர் பாதிரியாராக இருந்து வருகிறார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் சொந்தமாக கிறிஸ்தவ சபை கட்டி போதகம் செய்து வருகிறார். இவரது சபைக்கு சில ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக அவரிடம் செல்போன் எண்ணை ஜெகன் வாங்கி உள்ளார்.
எப்போதாவது போன் செய்து வந்த ஜெகன், காலப்போக்கில் அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை. ஒரு மகன் மட்டுமே உள்ளார் என்பதை அறிந்த மதபோதகர் அந்த பெண்ணி டம் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அந்த பெண் நேற்று மாலையில் வீட்டில் இருந்த 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










