» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் அக்.2ம் தேதி கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் தகவல்!!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:32:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 2ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வெளியிட்ட செய்திக்குறிப்பில், 02.10.2023 காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண்வரம்பின் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 02.10.2023 காந்தி ஜெயந்தி அன்று மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11.00 இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொது மக்களுக்குத்தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறயுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










