» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை: எச்.ராஜா பேட்டி
புதன் 27, செப்டம்பர் 2023 10:34:10 AM (IST)
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு நெருக்கடி காலத்தில் சிறை சென்றவர்களை பாராட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று சங்கரன்கோவிலுக்கு வந்தார். முன்னதாக தனியார் விடுதியில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது எங்களுக்கு நஷ்டம் இல்லை. அ.தி.மு.க.விற்குத்தான் நஷ்டம். 1991-ல் இருந்து பா.ஜ.க. தேசிய அளவில் தனித்து நின்று தனித்திறமையை நிரூபித்துள்ளது. 2014-ல் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். அப்போதே தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றி விட்டது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது தென்காசி மாவட்ட முன்னாள் தலைவர் ராமராஜா, மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி சுந்தர்ராஜ், சுப்பிரமணியன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










