» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
புதன் 2, ஜூன் 2021 8:42:30 PM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் மற்றும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைத்தல், கொரோனா கால நிதி அனைத்து தாலுகா பத்திரிகையாளர்களுக்கும் வழங்குதல், கொரோனாவால் மறைந்த செய்தியாளர்கள் குடும்ப நல நிதி பத்து லட்சம் ரூபாய் விரைவாக வழங்குதல் உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.
மாநில பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன், மாநிலத் துணை தலைவர்கள் கோவை ஏ.கே.பிரபாகரன், பொன்னேரி பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கினைப்பாளர் கடலூர் கே.ரமேஷ் குமார், புதுச்சேரி பத்திரிகையாளர் யூனியன் தலைவர் எம்.பி.மதிமகாராஜா, தலைமை நிலயச் செயலாளர் "திருத்தணி" விநோத் குமார், தேசியக் குழு உறுப்பினர் "கழுகு" கே.ராஜேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் சிவமூர்த்தி, தென் சென்னை மாவட்ட தலைவர் லட்சுமணன், மாநில அமைப்புச் செயலாளர் "லயன்" டாக்டர் எல்.பரமேஸ்வரன், இலக்கியப் பிரிவு செயலாளர் "கவிஞர்" PSP விஜயபாலா, மற்றும் நிர்வாகிகள் "ஸ்டிக்கர்" சுரேஷ், "அன்புக் கரங்கள்" அப்துல் லத்தீப், "இன்சூரன்ஸ்" கௌரி மேடம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)










