» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:02:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சிகளில் சேர மாணவ, மாணவிகள் மற்றும் கலை ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கான பகுதிநேர நாட்டுபுற கலைப்பயிற்சியான ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுபுறபாடல் மற்றும் புலியாட்டம் ஆகிய கலைகள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புறபாடல் மற்றும் புலியாட்டம் ஆகிய கலைகளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை சனிக்கிழமை மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை நடைபெறும். கல்லூhயில் படிக்கும் மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பகுதி நேரமாக கலைப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் மூலம் இக்கலைப் பயிற்சிக்கான தேர்வுகள் நடத்தப்ட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். படிப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் கலைகளை மட்டும் கற்றுக்கொள்ளலாம். இதற்கு வயது ஒரு தடையில்லை 17-வயது முதல் (வயது முதிர்ச்சி கிடையாது). இதற்கான கல்விகட்டணம் ஆண்டுக்கு ரூ.500/-.
ஆகவே கலை ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள், கலை ஆர்வலர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி - 2 என்ற முகவிரியிலும், தொலைபேசி எண் 93613 63190 தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








