» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)
தமிழகச் சட்டப்பேரவையை 'ரீல்ஸ்' போன்றுதான் தவெக அரசு நடத்துகிறது என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., கூறியதாவது: தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தவெகவைச் சேர்ந்தவர்களாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது.தவெக நிர்வாகிகள் மீது குற்றங்கள் சாட்டப்பட்டாலும் அல்லது அவர்கள் மீது விரல்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும், பல நேரங்களில் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக் குறியாகியுள்ளது.
கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், தற்போதைய தவெக அரசு சட்டப்பேரவையையே ஒரு 'ரீல்ஸ்' போன்று நடத்துகிறது என்ற உணர்வையே மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி முகூர்த்தத் திருமணங்கள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:58:30 AM (IST)








