» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

தருவைகுளத்தைச் சேர்ந்த விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் நடுவழியில் காணாமல் போனது தொடர்பாக தருவைகுளம் கடலோரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த விவின் என்பவருக்குச் சொந்தமான செவுள்வலை விசைப்படகில், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி இரவு தருவைகுளத்தில் இருந்து 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி அதிகாலை சுமார் 4:00 மணியளவில், தூத்துக்குடியில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் மணப்பாடு அருகே படகு சென்று கொண்டிருந்தபோது, படகிலிருந்த ராஜேஷ் (49) என்ற மீனவரைக் காணவில்லை.

சக மீனவர்கள் தேடிப் பார்த்தபோது, அவர் எதிர்பாராதவிதமாகத் தவறி கடலில் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் சக மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புவட்டாரப் போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தருவைகுளத்தில் இருந்து கூடுதல் படகுகளில் சென்ற மீனவர்களும் கடலில் மாயமான ராஜேஷைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த படகுகளில் இருந்து மீனவர்கள் அடுத்தடுத்து தவறி விழுந்து காணாமல் போகும் சம்பவங்கள் அப்பகுதி மீன்பிடி சமூகத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory