» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவரை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து ரூ.48.80 லட்சம் மோசடி செய்த வேலூரைச் சேர்ந்த வாலிபரைத் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த 61 வயது முதியவரின் செல்போனுக்கு வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், தான் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எனக் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக லக்னோவில் பயங்கரவாதி ஒருவனைக் கைது செய்ததாகவும், அவனிடமிருந்த செல்போன் எண் முதியவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பெறப்பட்டுள்ளதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

தொடர்ந்து மற்றொரு நபரும் இணைப்பில் பேசி, முதியவரின் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ளதாகப் பொய் கூறி, அவரை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாகப் பயமுறுத்தியுள்ளனர்.

டிஜிட்டல் கைதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு முதியவர் வேண்டியதைப் பயன்படுத்திக் கொண்ட மோசடி கும்பல், அவரைக் கட்டாயப்படுத்தி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 3 தவணைகளாக ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை அனுப்ப வைத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் இணைப்பைத் துண்டித்து ஏமாற்றியுள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மோசடியில் வேலூர் மாவட்டம் ஆர்.என்.பாளையம் பட்டேல் யூசுப் தெருவைச் சேர்ந்த சாபுதீன் (33) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சாபுதீனை உடனடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory