» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீனில் விடுதலை: திமுகவினர் உற்சாக வரவேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:23:32 PM (IST)
முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கடந்த மாதம் 20-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிமன்றம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுச் நகல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறைகள் நிறைவடைந்தன. இதன்பின்னர், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை திமுகவினர் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








