» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடைகளில் திடீர் சோதனை: 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், ரூ.6,700 அபராதம்!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:17:22 PM (IST)

Plastic4i4i.jpg

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெயராஜ் ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடைகளில் இருந்து 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.6,700 அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் கடைகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory