» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உதயநிதி ஸ்டாலின் கைது: தூத்துக்குடியில் தனி ஆளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண் கைது!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:42:25 PM (IST)

Salaimariyaltutlady.jpg

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தூத்துக்குடியில் பெண் ஒருவர் தனி ஆளாகச் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இதில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். திமுகவினர் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி என்பவர், உடனே சாலையில் இறங்கித் தனி ஒரு பெண்ணாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், "நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள்" எனக் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், "நான் செல்ல மாட்டேன், என்னையும் கைது செய்யுங்கள்" எனக் கூறி உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தனி ஆளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பாத்திமா பீவியை காவல்துறையினர் கைது செய்து ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் பாத்திமா பீவி என்பது தெரியவந்தது. தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தனி ஆளாகச் சாலை மறியலில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory