» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாய்மன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:07:15 PM (IST)

spickalvai.jpg

தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பாய்மன வாய்க்காலைத் தூர்வாரி சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது.

தூத்துக்குடி முள்ளக்காடு - முத்தையாபுரம் - அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஸ்பிக் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பாய்மன வாய்க்காலைத் தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை பாய்மன வாய்க்கால் தூர்வாரும் பணி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. 

இப்பணியின் தொடக்க நிகழ்விற்குச் ஸ்பிக் நிறுவன உதவிப் பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்துத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணியானது தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு உதவி மேலாளர் மணிகண்டன், முகப்பு நிலை அலுவலர் சரவணன், விவசாய சங்கத் தலைவர் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory