» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென்னங்குளம் கண்மாயினை தூர்வாரும் பணி : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:43:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு வண்டானம் ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், 14.41 ஹெக்டர் கொள்ளளவு கொண்ட தென்னங்குளம் கண்மாயினை விவசாய பெருமக்கள் பங்களிப்புடன் சீமை கருவேல மரங்கள் அகற்றும் மற்றும் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு வண்டானம் ஊராட்சியில் 14.41 ஹெக்டர் கொள்ளளவு கொண்ட தென்னங்குளம் கண்மாயினை விவசாய பெருமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணி இன்றைய தினம் சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்தில் உள்ள பெரிய குளம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்க பெருமக்கள் பட்டியலில் உள்ள அனைத்து குளங்களையும் சமூகப் பொறுப்பு நிதி, வளரும் பாரதம் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி திட்டம் (VB-GRAM G) பங்களிப்புடன் தூர்வாரும் பணி மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். எந்தெந்த குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாருவது குறித்து விவசாய சங்கத்தினருக்கு தான் தெரியும்.
அதனை பட்டியலிட்டு கொடுங்கள். அதனை அரசாணை எண் 50 திட்டத்தின் துணையுடன், தூர்வாரப்பட்ட மண்ணை தங்களுடைய நிலங்களுக்கே மண்ணை பயன்படுத்தும் வகையில் பணி மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை வரும் முன் இப்பணிகளை முடித்து சீர் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி போதுமான நீரினை சேமித்து வைக்க முடியும். குடிநீர் பற்றாக்குறையை சீர் செய்ய முடியும். ஆகவே விவசாய பெருமக்கள் தூர்வாரும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நா. சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, உதவி திட்ட அலுவலர் சீனிவாசன் மற்றும் விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)

தூத்துக்குடியில் வாகனம் மோதி ரவுடி பரிதாப பலி: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:36:15 AM (IST)

உப்பள நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்: நெல்லை முபாரக் வலியுறுத்தல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:28:38 AM (IST)

தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவி காவியாஸ்ரீக்கு பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:16:09 AM (IST)








