» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அப்பட்டமான கோழைத்தனம் - உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:29:50 PM (IST)
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்குத் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும்; நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் த.வெ.க. அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்." இவ்வாறு கனிமொழி எம்பி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








