» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதையடுத்து, அதைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது: "சட்டமன்றத்தில் தி.மு.க.வினரின் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறும் த.வெ.க. அரசு, பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
த.வெ.க. அரசு தொடர்ந்து ஜனநாயக வழியிலான போராட்டங்களை முடக்கி, மக்களின் குரல்வளையை நெரித்து வருகிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது." என்றார்.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கைது நடவடிக்கைக்கு எதிராகவும், காவல்துறையைக் கண்டித்தும் தீவிர முழக்கங்களை எழுப்பினர். இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








