» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:42:23 AM (IST)

குளத்தூர் அருகே பைக் விபத்தில் காயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசன்குளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜெயச்சந்திரன் (45). இவர் கடந்த 31.07.2026 அன்று இரவு மதுபோதையில் அரசன்குளத்தில் இருந்து குளத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழந்து தானாகவே சாலையில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த ஜெயச்சந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory