» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:31:46 AM (IST)

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட மையம் சார்பில், இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மண்டலத்தைச் சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகனுக்கு வழங்கப்பட்ட தற்காலிகப் பணிநீக்க ஆணையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பதிவாளரின் ஊழியர் விரோதப் போக்கு மற்றும் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அவர்களின் தன்னிச்சையான தவறான அணுகுமுறையைக் கண்டித்தும் இப்போராட்டம் நடத்தப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த மாலை நேரக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அனைத்துப் பணிகளுக்கும் போதிய அவகாசம் கொடுத்துப் பணி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்.கண்காணிப்புச் சாட்டு நடவடிக்கைகள்: இனிவரும் காலங்களில் 'கண்காணிக்கத் தவறினார்' என்ற காரணத்திற்காக ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.
அனைத்து நிலைகளிலும் நிலுவையிலுள்ள பதவி உயர்வுகளை வழங்கிட வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டாகியும் பணி ஆணை வழங்கப்படாத மூன்று துணைப் பதிவாளர்களுக்கு உடனடியாகப் பணி அமர்வு ஆணை வழங்கப்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுப்பணி இடமாறுதல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








