» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:06:34 AM (IST)
எட்டையபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தில் 82 வயது முதியவர் ஓடையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சண்முகையா (82). இவரது மனைவி பேச்சியம்மாள். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை இளம்புவனம் கிராமத்தில் உள்ள நாகேந்திரன் என்பவரது டீக்கடையில் நின்று பேசிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் இளம்புவனம் - வங்கார்பட்டி கிராமம் செல்லும் சாலையில் உள்ள ஓடைப் பகுதியில் சண்முகையா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








