» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:55:58 AM (IST)

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதாகிப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ., ஜி.வி. மார்க்கண்டேயனுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாகத் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்குச் சில முக்கிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
விதிக்கப்பட்ட நிபந்தனைகள்: "இனிவரும் காலங்களில் பொதுவெளியிலோ மேடைகளிலோ மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன்" என மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








