» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நற்கருணை பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:55:24 AM (IST)

Narkarunai2026.jpg

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆயர் ஸ்டீபன் தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக விமரிசையாக நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருவிழாவில், 8-ஆம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமிகளுக்கு பிஷப் நற்கருணை வழங்கினார். தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 4 மணிக்கு ஏழுகடல் துறை கடலோரப் பங்குகளின் இறைமக்களுக்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன.

மாலை 6.15 மணிக்குச் செபமாலை வழிபாட்டைத் தொடர்ந்து, பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணையை ஏந்தி, பெரிய கோயில் தெரு, செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, விக்டோரியா தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகப் பவனி எடுத்து வரப்பட்டது.

பின்னர் பேராலயம் முன்புள்ள மைதானத்தில் பிஷப் ஸ்டீபன் தலைமையில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. நற்கருணை பவனியை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

10-ஆம் திருவிழா (செவ்வாய்க்கிழமை): இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவப் பவனியும் நடைபெறும்.

11-ஆம் திருவிழா (புதன்கிழமை - பெருவிழா நாள்): காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறும். காலை 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.

சப்பர பவனி: புதன்கிழமை இரவு 7 மணிக்குத் தூத்துக்குடி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவச் சப்பர பவனி விமரிசையாக நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளைப் பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஜான் செல்வம், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு, பாதிரியார் மைக்சன் மற்றும் பேராலய நிர்வாகத்தினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory