» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருட இடையூறாக இருந்த கண்காணிப்பு கேமரா உடைப்பு: 2 வாலிபர்கள் கைது - கார் பறிமுதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:48:49 AM (IST)
காயல்பட்டினத்தில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு இடையூறாக இருந்த வீட்டுக் கண்காணிப்பு கேமராவை உடைத்துச் சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சத்யா நேற்று முன் தினம் காலையில் வீட்டின் வாசலில் தண்ணீர் தெளிக்க வந்துள்ளார். அப்போது, வீட்டின் முகப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டுச் சேதமடைந்து இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சத்யா அளித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோயில் பிள்ளை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், காயல்பட்டினம் காணியாளர் தெருவைச் சேர்ந்த முனீஸ்ராஜா (29) மற்றும் பாரதி நகரைச் சேர்ந்த அந்தோணிராஜ் ஆகிய இருவர்தான் கேமராவை உடைத்தது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் காரில் சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் திருடும் திட்டத்தில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டின் வாசலில் இருந்த கண்காணிப்பு கேமரா தங்களது திருட்டு முயற்சிக்கு இடையூறாக இருந்ததால், அதனை உடைத்துச் சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முனீஸ்ராஜா மற்றும் அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து, வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்புள்ளதா எனத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








