» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:46:40 AM (IST)
தூத்துக்குடியில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்பட்டது. அதோடு பலத்த காற்றும் தொடர்ந்து வீசி வந்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில், சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வட உள் கர்நாடகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரையிலும், தென் உள் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாகவும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
வானிலை மைய அறிவிப்பின்படி, நேற்று காலை முதலே தூத்துக்குடியில் பலத்த காற்று வீசியது. அவ்வப்போது கருமேகங்கள் திரண்டு காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.
இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் திடீரெனப் பலத்த சாரல் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரின் சில இடங்களில் லேசாக மழைநீர் தேங்கியது. இதேபோல் இன்று (ஆகஸ்ட் 3) அதிகாலையிலும் பரவலாக லேசான தூறல் பெய்தது.
இந்தத் திடீர் மழையின் காரணமாகக் கடந்த சில நாட்களாக நகரில் நிலவி வந்த கடுமையான வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான மற்றும் இதமான சூழல் நிலவுவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








