» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து பணம், செல்போன் திருடிய வாலிபர் கைது!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:42:47 AM (IST)

ஆறுமுகநேரியில் நள்ளிரவில் வீடுபுகுந்து ரூ.22 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் மூடிசூடலை ரமேஷ் (53). சம்பவத்தன்று இரவு இவரது தாயார் ஜானகியம்மாள் வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அன்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், ஜானகியம்மாள் தலையணைக்கு அடியில் வைத்திருந்த செல்போன் மற்றும் வீட்டின் பானைக்குள் வைத்திருந்த ரூ.22,000 ரொக்கப் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுவிட்டார்.

இது குறித்து மூடிசூடலை ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருதயராஜ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். போலீசாரின் விசாரணையில், ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த சக்திவேல் (33) என்பவர்தான் நள்ளிரவில் வீடுபுகுந்து பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சக்திவேலை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.22,000 ரொக்கம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட சக்திவேலை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory