» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேடநத்தம் சிறுமி படுகொலை: குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை : அமைச்சர் கீதா ஜீவன் உறுதிமொழி!
வெள்ளி 13, மார்ச் 2026 11:01:35 AM (IST)
வேடநத்தம் சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்றுத்தர முதல்வர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியாக இருப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரையும், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொதுமக்களையும் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இந்த வழக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இயந்திரம் இந்த விஷயத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் மிக விரைவில் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்றார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதிலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சமரசமற்ற முறையில் உறுதியாக இருக்கிறார் என்றும், இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி படுகொலை: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
வெள்ளி 13, மார்ச் 2026 3:27:36 PM (IST)

முத்தாலங்குறிச்சி ஆர்.சி. பள்ளிக்கு புதிய கட்டிடம்: ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:21:12 PM (IST)

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

வியாபாரிகள் சங்க நிர்வாகி மீது தாக்குதல் : தந்தை - மகன் கைது!
வெள்ளி 13, மார்ச் 2026 10:56:00 AM (IST)

தூத்துக்குடி 3ஆவது மைல் முதல் திரேஸ்புரம் வரை புதிய சாலைப் பணி: மேயர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:46:43 AM (IST)

மக்களோடு மக்களாகப் பணியாற்றுவது திமுக மட்டுமே: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:37:08 AM (IST)









maniMar 13, 2026 - 01:52:07 PM | Posted IP 104.2*****