» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களோடு மக்களாகப் பணியாற்றுவது திமுக மட்டுமே: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

வெள்ளி 13, மார்ச் 2026 10:37:08 AM (IST)



மக்களோடு மக்களாகப் பணியாற்றுவது திமுக மட்டுமே என்று தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 73-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48-வது வார்டு கால்டுவெல் காலனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வட்டச் செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சுமார் 1500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் பேசியதாவது: உங்களில் ஒருவராக இருந்து தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். மக்களோடு மக்களாக இருந்து எப்போதும் பணியாற்றுவது திமுக தான்.

'விடியல் பயணம்' திட்டம் பெண்களின் பொருளாதாரத் தடையை நீக்கி, அவர்களுக்குப் மிகப்பெரிய சுதந்திரத்தைத் தந்துள்ளது. 33 சதவீத இடஒதுக்கீடு மூலமே நான் 1996-ல் ஊராட்சி உறுப்பினராகத் தேர்வாகி, இன்று அமைச்சராக 30 ஆண்டுகால பொதுவாழ்வில் உங்களோடு பயணிக்கிறேன். மகளிர் உரிமைத் தொகை தற்போது 1000 வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு இது 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

14 வயதில் கொடி பிடிக்கத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகத்தை முதலமைச்சர் மாற்றியுள்ளார். வரவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளியின் கோரிக்கை ஏற்பு 

நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தார். மனுவைப் பரிசீலித்த அமைச்சர் கீதா ஜீவன், உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சைக்கிள் வழங்கத் தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

இவ்விழாவில் மாநிலப் பேச்சாளர் சரத்பாலா, பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், தொழிலாளர் அணி துணைத் தலைவர் செந்தில்குமார், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், விஜயக்குமார், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory