» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாஸ்டர் பிளான்-2045 திட்டத்திற்கு அரசு ஒப்புதல்: அரசிதழில் வெளியீடு!

வெள்ளி 13, மார்ச் 2026 8:44:28 AM (IST)



தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான புதிய முழுமைத் திட்டம் - 2045 (Master Plan-2045) திட்டத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 34 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 463.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான 'முழுமைத் திட்டம்-2045' தயார் செய்யப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு தற்போது தமிழக அரசு ஆணை பிறப்பித்து ஒப்புதல் அளித்துள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முழுமைத் திட்டத்தின் விபரங்களை பொதுமக்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உள்ளூர் திட்டக் குழுமம் / மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று பார்வையிடலாம்.

நேரில் வர இயலாதவர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தூத்துக்குடி மக்கள் இத்திட்டத்தைத் தெரிந்துகொள்ள வசதியாக, https://thoothukudilpa.com/ என்ற இணையதள முகவரியிலும் இத்திட்டத்தின் வரைபடம் மற்றும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அடுத்த 20 ஆண்டுகால தூத்துக்குடியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் இந்த மாஸ்டர் பிளான் திட்டம், மாவட்டத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ஆமாMar 13, 2026 - 09:33:14 AM | Posted IP 172.7*****

அப்படி சொல்லி விவசாய நிலங்களை ஆட்டைய போட்டு அழித்து பிளாட் கட்டி விற்கிற பிளான் ஆ ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory