» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

இரணியல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த உயர் அதிகாரியின் ரயில் இன்ஜினை, இளைஞர் காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை வலியுறுத்தி, ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்க இளைஞர் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இதற்காக, நேற்று சிறப்புச் சோதனை ரயில் இன்ஜின் மூலம் ஆய்வு செய்ய வந்த உயர் அதிகாரியைச் சந்திக்க நிர்வாகிகள் சென்றனர்.
ஆனால், அந்த அதிகாரி மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, நிர்வாகிகளைச் சந்திக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கட்சியினரும் பொதுமக்களும், அதிகாரி வந்த அந்தச் சோதனை ரயில் இன்ஜினை முற்றுகையிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து சிறைபிடித்தனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பியூட்லின் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, குருந்தன்கோடு வட்டாரத் தலைவர் ஸ்ரீவேணு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மதியழகன், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் துணைத் தலைவர் விஜூமோன், கவுன்சிலர் ஜேக்கப், தக்கலை வட்டாரத் தலைவர் திஜீ, வின்சென்ட் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வேறு வழியின்றி இறங்கி வந்த ரயில்வே அதிகாரி, நிர்வாகிகளை நேரில் அழைத்துச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதிகாரியின் உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னரே சிறைபிடிக்கப்பட்ட ரயில் இன்ஜின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு : பூ மார்க்கெட், குடியிருப்புப் பகுதிகளில் ஆதரவு திரட்டல்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:10:56 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

கருணாநிதியின் கொள்கைகளைத் திமுகவினர் புதைத்து விட்டார்கள் - குஷ்பூ காட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:34:04 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்கள் பொருத்தும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:25:20 PM (IST)

தொகுதி மக்களுக்காக முழுவீச்சில் பணியாற்றினேன் : விளாத்திகுளத்தில் மார்கண்டயேன் வாக்குசேகரிப்பு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:44:27 PM (IST)






