» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்கள் பொருத்தும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 4:25:20 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகளை ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் இப்பணிகளின் போது, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:  மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பெல் (BEL) நிறுவனப் பொறியாளர்கள் மூலம் VVPAT இயந்திரங்களில் குறியீடு ஏற்றுதல் மற்றும் Control Unit (CU)-ல் வேட்பாளர் தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும் இயந்திரங்களின் எண்கள் (CU, BU, VVPAT numbers) இறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணைய விதிப்படி சீலிடப்படுகின்றன. ஏதேனும் இயந்திரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டால், அவை உடனடியாக மாற்றப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்படும்.

வாக்காளர்களின் வசதிக்காக இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார்: மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்குள் கைபேசிகளுக்கு அனுமதி இல்லாததால், இந்த முறை புதிய வசதியாக டோக்கன் (Token) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் கைபேசிகளை வெளியே ஒப்படைத்துவிட்டு, வாக்களித்த பின் பெற்றுக் கொள்ளலாம்.

பாகம் எண் (Part No) மற்றும் வரிசை எண் தெரியாதவர்களுக்கு உதவ, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் 'Booth Facilitation Desk' அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் தலைமையில் பாதுகாப்புத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர்  சி. பிரியங்கா, கூடுதல் ஆட்சியர்  இரா. ஐஸ்வர்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory