» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொகுதி மக்களுக்காக முழுவீச்சில் பணியாற்றினேன் : விளாத்திகுளத்தில் மார்கண்டயேன் வாக்குசேகரிப்பு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:44:27 PM (IST)

"கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்துள்ளேன்” என விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான மார்க்கண்டேயன், இன்று பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பனையடிபட்டி, அயன் பொம்மையாபுரம், கந்தசாமிபுரம், ஆற்றங்கரை, ஓயம்பட்டி, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், என். வேடப்பட்டி, அச்சங்குளம், அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, கைலாசபுரம், அயன்ராஜாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவு கோரி அவர் பிரச்சாரம் செய்தார்.
வாக்கு சேகரிப்பின் போது மார்க்கண்டேயன் பேசியதாவது: "கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில், தமிழக அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் உங்கள் இல்லம் தேடி வர முழு வீச்சில் பணியாற்றியுள்ளேன். குறிப்பாக, விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்குப் புதிய 'மகளிர் விடியல் பேருந்துகளை' இயக்கி சாதனை படைத்துள்ளோம்.
தொகுதியில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத் தந்துள்ளேன். ஒரு சில விடுபட்ட மக்களுக்கும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாய் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
இந்நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலாளர் ராமசுப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சடையாண்டி, முன்னாள் கவுன்சிலர் நடராஜன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு : பூ மார்க்கெட், குடியிருப்புப் பகுதிகளில் ஆதரவு திரட்டல்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:10:56 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

கருணாநிதியின் கொள்கைகளைத் திமுகவினர் புதைத்து விட்டார்கள் - குஷ்பூ காட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:34:04 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்கள் பொருத்தும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:25:20 PM (IST)

திமுக அரசு பொய் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டது - அதிமுக வேட்பாளர் சத்யா குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:32:14 PM (IST)






